என்னது ஸ்ட்ரைக்கா... அய்யய்யோ.. பீதியில் சென்னை மக்கள்!





சென்னை: தனியார் தண்ணீர் லாரிகள் வரும் 27 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.
சென்னையில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இருந்தாலும் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பின் இந்த ஆண்டுதான் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 
பருவ மழைகள் பொய்த்து போனதே இதற்கு காரணம். போதிய மழை இல்லாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி நீர்த்தேக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு போய்விட்டன.

வற்றிய கிணறுகள் நிலத்தடி நீரும் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டதால், சென்னையில் கிணறு மற்றும் ஆழ்துளை குழாய் தண்ணீரை நம்பியிருந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகர் புறங்களில் நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் புறநகர் பகுதிகளுக்கு வீடுகளை காலி செய்துவிட்டு செல்கின்றனர்.


அன்றாட தேவை பெரும்பாலான குடியிருப்புகளில் தண்ணீர் லாரிகள் மூலம் பெறப்படும் தண்ணீரை வைத்தே அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துவருகின்றன. இதனால் நாள்தோறும் சென்னையின் பல இடங்களில் மக்கள் குடங்களோடு அலைவதை பார்க்க முடிகிறது.


வேலைநிறுத்தம் தனியார் தண்ணீர் லாரிகள் நிலத்தடி நீரை எடுக்கவும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நிலத்தடி நீரை எடுக்க உரிமம் வழங்கக்கோரி தனியார் தண்ணீர் லாரிகள் வரும் 27ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.


தட்டுப்பாடு அதிகரிக்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். தனியார் தண்ணீர் லாரிகளின் போராட்ட அறிவிப்பால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.