பாக். போர் விமானம் இந்தியாவால் வீழ்த்தப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது.. முப்படை பிரஸ் மீட்டில் அறிவிப்பு


டெல்லி: பாகிஸ்தானுடன் போர் பதட்டம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்திய முப்படைகளின் சார்பில் இன்று இரவு 7 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் மஹல், விமானப்படை தளபதி ஆர்ஜிகே,கபூர், கடற்படை தளபதி தல்பீர் சிங் குஜ்ரால் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் பேட்டியளித்தனர்.
ஆர்ஜிகே கபூர் கூறியதாவது: 27ம் தேதி பாகிஸ்தான் விமானப்படை இந்திய வான் எல்லையை கடந்து வந்தன. ரஜோரி பகுதியில் எல்லையை கடந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் வந்தன மிக் 21 பைசன், மிராஜ் 2000 உள்ளிட்ட இந்திய விமானங்கள் அவற்றை வழி மறித்தன. இதையடுத்து, பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய நிலைகளை குறி வைத்து தாக்கின
இருப்பினும், பாகிஸ்தான் விமானப்படையால் எந்த சேதத்தையும் விளைவிக்க முடியவில்லை. பாகிஸ்தானின் எப் 16 விமானம் ஒன்று, நமது, மிக் 21 பைசன் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பணியின்போது, இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் விமானம் மாயமானது.


இந்திய விமானி ஒருவர், பாராசூட்டில் பாக் எல்லைக்குள் குதித்தபோது அந்த நாட்டு ராணுவத்தால் பிடிபட்டார். நம்மால் சுட்டு வீழ்த்தப்பட்ட எப் 16 போர் விமானத்திலிருந்து 2 விமானிகள் பாரசூட்டிலிருந்து அந்த நாட்டு எல்லைக்குள், குதித்தனர். நேற்று இரு இந்திய விமானிகள் இருப்பதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால், மாலையில்தான் 1 விமானி மட்டுமே தங்களிடம் இருந்ததாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ரஜோரி கிழக்கு பகுதியில், எப் 16 விமானத்தில் பயன்படுத்தப்படும், வின்வெளி தாக்குதலுக்கான ஏவுகணையின் பகுதிகள் மீட்கப்பட்டது. எப் 16 விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்தது. ஆனால் அந்த விமானத்தில் இருந்த ஏவுகணையின் ஒரு பகுதி நம்மிடம் சிக்கியுள்ளது. இது முக்கிய ஆதாரமாகும். இந்திய விமானப்படை எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.