தளபதியின் மாஸ்டர் பிளான் சர்கார் வெளியீட்டு தேதி மாற்றம்------ விவரம் உள்ளே

AR முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது AR ரஹ்மான் படத்திற்கு இசை அமைக்கிறார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் முக்கிய வேடத்த்தில் வரலஷ்மி சரத்குமார் நடிக்கிறார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ளது

தளபதியின் மாஸ்டர் பிளான் நவம்பர் 2ம் தேதியே சர்கார் படம் வெளியாகிறது

சர்கார் படத்தை இந்த வாரமே சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்க படக்குழுவினர் மற்றும் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் சர்கார்
படத்தை நவம்பர் 6ம் தேதிக்கு பதில் நவம்பர் 2ம் தேதியே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நவம்பர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை மேலும் தொடர் விடுமுறையால் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்பதை மனதில் வைத்து ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளார்களாராம் விஜய் வெள்ளிக்கிழமை துவங்கி செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் வசூல் வேட்டை நடத்தவே இந்த திட்டம் எனவும் கூறப்படுகிறது
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தேதி மாறினால் என்ன சர்காரை கொண்டாட நாங்கள் தயாராக உள்ளோம் என்று கூறி வருகின்றனர் 2ம் தேதி வெளியானாலும் சரி 6ம் தேதி வெளியானாலும் சரி சர்கார் படத்தை
தெறிக்க விடுவது என்ற எண்ணத்தில் உள்ளார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.