4ஜியை விட 5ஜி ரேட் கம்மிதான்: ஜியோ 5ஜி அப்டேட்! Jio


இந்திய தொலைத்தொடர்பு துறையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 5ஜி சேவை குறித்த சமீபத்திய தகவலை முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.


இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் டெலிகாம் சந்தை மட்டுமின்றி ஒவ்வொரு துறையையும் மாற்றியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதன்படி, 2019 - 2020 ஆம் ஆண்டுகளில் 5ஜி சூழல் தயார் நிலையில் இருக்கும், ஆனால், 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் சாதனங்கள் தற்சமயம் வெளியாகாத நிலையில், இவை 2019 ஆம் ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே, 5ஜி தொழில்நுட்பம் கொண்ட விலை குறைந்த சாதனங்களின் பயன்பாடு இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு வாக்கில்தான் அதிகரிக்குமாம். அதேபோல், இன்னும் சில ஆண்டுகள் அழித்து பயன்பாட்டிற்கு வரவிருக்கும் சேவைக்கு இப்பொழுதே விலை நிர்ணயம் செய்ய முடியாது எனவும் ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜியோ நிறுவனத்துக்கு 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்ய 28 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்வீடன் நாட்டில் டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்யும் எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவைக்கான வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறது.


எரிக்சன் நிறுவனத்தின் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஒசியானா மற்றும் நுன்சினோ மிர்டிலோ பகுதிகளுக்கான தலைவர் 4ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது 5ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணம் குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.